புழுக்கு கேரள சாப்பாட்டிற்குள்ள (சத்யா) துணைக்கறிகள் அவியல், தோரன், எரிசேரி, ஓளன், தீயல், என்பவை. இவை அல்லாமல் கேரள கஞ்சிக்கு என்று ஒரு சிறப்பு துணைக்கறி உண்டு. அது தான் புழுக்கு . நெல்லை புழுங்கி உண்டாக்குவது புழுங்கல் அரிசி. அது போல் கிழங்குகளை புழுங்கி உண்டாக்குவது புழுக்கு. அடுத்துள்ள ஈழவர் (நாராயண குருவை பின் பற்றுபவர்கள்) குடும்பங்கள் நீத்தார் நினைவு நாளன்று முன்னோர்களுக்கு கஞ்சியும், புழுக்கும், மாங்காய் ஊறுகாயும் படைத்து, அடுத்துள்ளவர்க்கு தந்து உண்பர். சாதாரணமாக உருளைக்கிழங்கு தவிர்த்து, மரவள்ளி, வாழைக்காய், சேனை, சேம்பு, காய்ச்சில், சிறுகிழங்கு, கூர்க்கன் கிழங்கு, சர்க்கரைவள்ளி போன்றவற்றை வேவித்து (புழுங்கி) செய்யப்படும் ஒரு கறிவகை தான் புழுக்கு. எல்லா கிழங்குகளும் வேண்டும் என்பது இல்லை, உள்ளது போதும், இவற்றை குழைத்து சேர்த்து வைப்பது, மத்தங்காய் (பரங்கிக்காய்), மற்றும் தேங்காய் அரவை. கூடுதலாக கருப்பு கொண்டைக்கடலை, சேர்க்கப்படும். கிட்டத்தட்ட எரிசேரி போன்றது தான். ஒரு துண்டு மரவள்ளி (மரசீனி, கப்ப, குச்சி கிழங்கு) இருந்தது. புழுக்கு செய்யலாம் என்று ஒரு தோணல். மேலும...
இடுகைகள்
ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது