இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
5. 'கொக்கரகோ' ஒருநாள் மாலை. நான் கடற்கரை முன்பு கண்மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே! "வைஸ்ராயைப் பார்த்தாயோ, இல்லையோ?" என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண்விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக்கொண்டே நின்றான். "இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?" என்று நான் வினவினேன். "அவர் என்னைப் பார்க்காமல் கூட இருப்பாரா? போனவாரத்தில் கூட 'வீரர் வில்லிங்டன்' என்று முதல் தரமான தலையங்கமொன்று எழுதினேனே, தெரியாதா?" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சுந்தரம் டிப்டி கலெக்டராக இருப்பதாகச் சொன்னால் கூட நான் நம்பத் தயார். ஆனால் பத்திரிகாசிரியராக இருப்பதாகச் சொன்ன போது கொஞ்சங்கூட நம்ப முடியவே இல்லை. "தலையங்கம் யார் எழுதினது?" என்று நான் வினவினேன். "அரெரே! சமாசாரமே தெரியாதா?" என்று பீடிகை போட்டுக் கொண்டு, சுந்தரம் தன் சுயசரிதையைத் தொடங்கினான். அதற்குள் எனக்கு அறி