இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  நான் படிச்ச கதை (JK) மரப்பாச்சி உமா மஹேஸ்வரி பெண்ணிய எழுத்தாளர் அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்” என்ற கதையை வாசகர்களுக்கு பரிச்சயம் இருக்கும். நினைவில் நிற்கக் கூடிய சிறுகதைகளில் ஒன்று அது. சிறுமியாக இருந்தபோது கருப்பியாக இருந்தாலும் காக்கைக்கு பொன்குஞ்சாக அவள் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிந்த அம்மா,  அவள் பூப்படைந்தவுடன் “ உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்" என்று ஆதங்கப் படும்போது  அவள் கொல்லப்பட்டதாகவே உணர்கிறாள். அம்மாக்களுக்கே உண்டாகும் ‘எப்படி இவளை கரை ஏற்றுவோனோ’ என்ற கவலை அது. உமா மஹேஸ்வரியும் ஒரு பெண்ணிய எழுத்தாளராகக் கருதப் படுகிறார். அவருடைய  “மரப்பாச்சி” கதையும் மேற்கூறிய அம்பையின் கதையை ஒட்டியே இருக்கிறது. இந்தக் கதையில் வரும் அனுவின் அம்மாவுக்கும் அது போன்ற கவலை தோன்ற ஆரம்பிக்கிறது. ஆனாலும் ஒரு சிறு வித்தியாசம் உண்டு. அனு  பூப்படையவில்லை. பூப்படையும் பருவத்தை எட்டியிருந்தாள். மாற்றங்கள் மாற்றங்கள். உடலிலும், மனதிலும் மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.. முக்கியமாக  ஆணின் ஸ்பரிசம். அதுவரை எந்த ஆணுடைய  ஸ்பரிசமும் அவளுக்கு வித்தியாசமாய்