இடுகைகள்

படம்
  புழுக்கு கேரள சாப்பாட்டிற்குள்ள (சத்யா) துணைக்கறிகள் அவியல், தோரன், எரிசேரி, ஓளன், தீயல், என்பவை. இவை அல்லாமல் கேரள கஞ்சிக்கு என்று ஒரு சிறப்பு துணைக்கறி உண்டு. அது தான் புழுக்கு . நெல்லை புழுங்கி உண்டாக்குவது புழுங்கல் அரிசி. அது போல் கிழங்குகளை புழுங்கி உண்டாக்குவது புழுக்கு.  அடுத்துள்ள ஈழவர் (நாராயண குருவை பின் பற்றுபவர்கள்) குடும்பங்கள் நீத்தார் நினைவு நாளன்று முன்னோர்களுக்கு கஞ்சியும், புழுக்கும், மாங்காய் ஊறுகாயும் படைத்து, அடுத்துள்ளவர்க்கு தந்து உண்பர். சாதாரணமாக உருளைக்கிழங்கு தவிர்த்து, மரவள்ளி, வாழைக்காய், சேனை, சேம்பு, காய்ச்சில், சிறுகிழங்கு, கூர்க்கன் கிழங்கு, சர்க்கரைவள்ளி போன்றவற்றை வேவித்து (புழுங்கி) செய்யப்படும் ஒரு கறிவகை தான் புழுக்கு. எல்லா கிழங்குகளும் வேண்டும் என்பது இல்லை, உள்ளது போதும், இவற்றை குழைத்து சேர்த்து வைப்பது, மத்தங்காய் (பரங்கிக்காய்), மற்றும் தேங்காய் அரவை. கூடுதலாக கருப்பு கொண்டைக்கடலை, சேர்க்கப்படும். கிட்டத்தட்ட எரிசேரி போன்றது தான். ஒரு துண்டு மரவள்ளி (மரசீனி, கப்ப, குச்சி கிழங்கு) இருந்தது. புழுக்கு செய்யலாம் என்று ஒரு தோணல். மேலும...
படம்
  நான் படிச்ச கதை (JK) மரப்பாச்சி உமா மஹேஸ்வரி பெண்ணிய எழுத்தாளர் அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்” என்ற கதையை வாசகர்களுக்கு பரிச்சயம் இருக்கும். நினைவில் நிற்கக் கூடிய சிறுகதைகளில் ஒன்று அது. சிறுமியாக இருந்தபோது கருப்பியாக இருந்தாலும் காக்கைக்கு பொன்குஞ்சாக அவள் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிந்த அம்மா,  அவள் பூப்படைந்தவுடன் “ உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்" என்று ஆதங்கப் படும்போது  அவள் கொல்லப்பட்டதாகவே உணர்கிறாள். அம்மாக்களுக்கே உண்டாகும் ‘எப்படி இவளை கரை ஏற்றுவோனோ’ என்ற கவலை அது. உமா மஹேஸ்வரியும் ஒரு பெண்ணிய எழுத்தாளராகக் கருதப் படுகிறார். அவருடைய  “மரப்பாச்சி” கதையும் மேற்கூறிய அம்பையின் கதையை ஒட்டியே இருக்கிறது. இந்தக் கதையில் வரும் அனுவின் அம்மாவுக்கும் அது போன்ற கவலை தோன்ற ஆரம்பிக்கிறது. ஆனாலும் ஒரு சிறு வித்தியாசம் உண்டு. அனு  பூப்படையவில்லை. பூப்படையும் பருவத்தை எட்டியிருந்தாள். மாற்றங்கள் மாற்றங்கள். உடலிலும், மனதிலும் மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.. முக்கியமாக  ஆணின் ஸ்பரிசம். அதுவரை எந்த ஆணுடைய  ஸ்பரி...
5. 'கொக்கரகோ' ஒருநாள் மாலை. நான் கடற்கரை முன்பு கண்மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே! "வைஸ்ராயைப் பார்த்தாயோ, இல்லையோ?" என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண்விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக்கொண்டே நின்றான். "இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?" என்று நான் வினவினேன். "அவர் என்னைப் பார்க்காமல் கூட இருப்பாரா? போனவாரத்தில் கூட 'வீரர் வில்லிங்டன்' என்று முதல் தரமான தலையங்கமொன்று எழுதினேனே, தெரியாதா?" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சுந்தரம் டிப்டி கலெக்டராக இருப்பதாகச் சொன்னால் கூட நான் நம்பத் தயார். ஆனால் பத்திரிகாசிரியராக இருப்பதாகச் சொன்ன போது கொஞ்சங்கூட நம்ப முடியவே இல்லை. "தலையங்கம் யார் எழுதினது?" என்று நான் வினவினேன். "அரெரே! சமாசாரமே தெரியாதா?" என்று பீடிகை போட்டுக் கொண்டு, சுந்தரம் தன் சுயசரிதையைத் தொடங்கினான். அதற்குள் எனக்கு அறி...